Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜெர்மனியின் ஆளும் கட்சி- புதிய தலைவர் நியமனம்

ஜெர்மனியின் ஆளும் கட்சியான CDU, திரு. அர்மின் லாஷெட்டைப் (Armin La-Shet) புதுத் தலைவராகத் தெரிவுசெய்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஜெர்மனியின் ஆளும் கட்சி- புதிய தலைவர் நியமனம்

படம்: CHRISTIAN MANG/POOL/AFP via Getty Images

ஜெர்மனியின் ஆளும் கட்சியான CDU, திரு. அர்மின் லாஷெட்டைப் (Armin La-Shet) புதுத் தலைவராகத் தெரிவுசெய்துள்ளது.

அவர் ஜெர்மனியில் ஆக அதிக மக்கள்தொகையைக் கொண்ட மாநிலத்தின் முதல்வராவார்.

எதிர்த்துப் போட்டியிட்ட பிரைட்ரிச் மெர்ஸைவிட (Freidrich Merz) அதிக வாக்குகளைப் பெற்று அவர் வெற்றிபெற்றார்.

மேற்கத்திய நாடுகளை அச்சுறுத்திவரும் தீவிரவாதம், கொரோனா கிருமிப்பரவல் போன்ற பிரச்சினைகளை முறியடிக்க ஒன்றுபட்ட முயற்சிகளின் முக்கியத்துவத்தைத் தமது வெற்றி உரையின்போது திரு. லாஷெட் வலியுறுத்தினார்.

திருமதி ஏங்கலா மெர்க்கல் (Angela Merkel), 2005ஆம் ஆண்டிலிருந்து தேர்தல்களில் வென்று, 4 தவணைக் காலம் பிரதமராகச் சேவையாற்றி வருகிறார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அவர் முன்னதாகக் கூறியிருந்தார்.

ஆளும் CDU கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் 2018ஆம் ஆண்டு இறுதியில் அவர் விலகினார்.

எனினும், அந்தப் பொறுப்பை வகிக்கப் பொருத்தமானவரைக் கட்சியால் தெரிவுசெய்ய இயலவில்லை.

தற்போது திரு.லாஷெட் கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் பிரதமர் வேட்பாளராக மற்றொருவரைக் கட்சி நியமிக்கும் சாத்தியம் உள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்