Images
ஜெர்மனி: குடியேறிகளின் செலவுகளைச் சமாளிக்க 6.85 பில்லியன் யூரோ நிதி
ஜெர்மானிய மத்திய அரசாங்கம், அடுத்த ஆண்டு அதன் மாநிலங்களுக்கு 6.85 பில்லியன் யூரோ நிதியை விநியோகிக்க சம்மதித்துள்ளது. குடியேறிகளின் வீடமைப்பு, சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான செலவுகளைச் சமாளிக்க வட்டாரங்களுக்கு அது உதவும் என்று அரசாங்க வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியேறிகளையும் அகதிகளையும் ஒருங்கிணைக்க ஜெர்மனி முயன்று வருகிறது. அவர்கள் 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் ஜெர்மனிக்குள் நுழைந்தவர்கள்.
ஜெர்மானியப் பிரதமர் ஏங்கலா மெர்க்கல் எல்லைகளை வெளிநாட்டினருக்குத் திறந்த பின்னர், பெரும் எண்ணிக்கையில் அவர்கள் ஜெர்மனிக்குள் நுழைந்தனர்.
ஜெர்மானிய மொழி வகுப்புகள், வசிப்பிட அனுகூலங்கள், வீடமைப்புச் சலுகைகள் ஆகியவற்றுக்காக அந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

