Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கானா பல்கலைக்கழகத்திலிருந்து அகற்றப்பட்ட காந்தியின் சிலை

கானா தலைநகர் அக்ராவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இந்தியாவின் தேசத்தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தியின் சிலை அகற்றப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கானா பல்கலைக்கழகத்திலிருந்து அகற்றப்பட்ட காந்தியின் சிலை

(படம்: Pixabay)

கானா தலைநகர் அக்ராவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இந்தியாவின் தேசத்தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தியின் சிலை அகற்றப்பட்டுள்ளது.

சிலையை இந்தியாவின் முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜி, ஈராண்டுகளுக்கு முன் கானா பல்கலைக்கழகத்தில் திறந்துவைத்தார்.

காந்தி ஓர் இனவாதி என்று சாடிய பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், சிலையை அகற்றுமாறு கோரினர்.

காந்தியின் சிலைக்குப் பதிலாக ஆப்பிரிக்க தலைவர்களின் சிலைகள் எழுப்பப்படவேண்டும் என்று அவர்கள் கூறினர்.

வளாகத்தின் கேளிக்கைச் சதுக்கத்தில் இருந்த சிலையை மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு கானா அரசாங்கம் திட்டம்வைத்திருந்தது.

ஆனால், அதற்குள் சிலை புதன்கிழமை அன்றே அகற்றப்பட்டுவிட்டதாக விரிவுரையாளர்களும், மாணவர்களும் BBC செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்