Images
  • Giant Turtle
    (படம்: Pixabay)

உலகில் ஆக அரியவகை ஆமை மரணம்

உலகின் ஆக அரிய, மிருதுவான ஓட்டைக் கொண்ட யாங்ட்சே ராட்சத ஆமை ஒன்று சமீபத்தில் மாண்டது.

அந்தப் பெண் ஆமை தென் சீனாவிலுள்ள சூசோ விலங்கியல் தோட்டத்தில் இறந்துபோனது.

இறப்பதற்கு ஒரு நாள் முன்பு இனப்பெருக்கத்திற்காக 90 வயதான அந்த ஆமையைச் செயற்கையாகக் கருத்தரிக்க வைக்க நிபுணர்கள் முயற்சி செய்திருக்கின்றனர்.

அத்தகைய முயற்சி 5-ஆம் முறையாக மேற்கொள்ளப்பட்டது.

ஆமையின் மரணத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டுவருகிறது. ஆமையின் கருப்பை திசு எதிர்கால ஆராய்ச்சிக்காகப் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.

வேட்டையாடுவது, அளவுக்கு அதிகமாக மீன்பிடிப்பது, அதன் வாழ்விடத்தை அழிப்பது போன்ற காரணங்களால் இவ்வினத்தைச் சேர்ந்த ஆமைகள் 3 மட்டுமே தற்போது உயிரோடிருக்கின்றன.
  

Top