Images
  • giraffe
    (படம்: Australia Zoo/Facebook)

கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ள ஆஸ்திரேலிய ஒட்டகச்சிவிங்கி

உலகிலேயே ஆக உயரமான ஒட்டகச்சிவிங்கி என்று ஆஸ்திரேலியா விலங்கியல் தோட்டத்தில் உள்ள ஓர் ஒட்டகச்சிவிங்கி கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளது.

Forest எனப்படும் ஒட்டகச்சிவிங்கியின் உயரத்தை அளவெடுப்பது சாதாரண வேலை இல்லை என்று விலங்கியல் தோட்டத்தின் காப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஒட்டகச்சிவிங்கிகள் சற்றுப் பதற்றமடையக்கூடிய விலங்குகள்.

Forestஐ அளவுகோல் அருகே நிற்க வைத்துப் படமெடுப்பதற்குப் பல மாதங்களாயின.

இறுதியில், அதைப் பெரிய அளவுகோல் மீது தலை சாய்ந்தபடி நிற்க ஊக்குவித்துப் படங்கள் எடுக்கப்பட்டதாக ABC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அரும்பாடுபட்டு மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சி வீண் போகவில்லை.

5.7 மீட்டர் உயரங்கொண்ட Forest தான் உலகிலேயே ஆக உயரமான ஒட்டகச்சிவிங்கி என்று கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

12 வயதான அது, இன்னும் வளர்ந்துகொண்டிருப்பதாக ABC செய்தி நிறுவனம் கூறியது.

10 குட்டிகளுக்குத் தந்தையான Forest, 11வது குட்டியை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக விலங்கியல் தோட்டக் காப்பாளர் தெரிவித்தார்.

Top