Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டனில் தத்தெடுத்த நாய்களை அதிகமானோர் தத்துக் கொடுக்க எண்ணுகின்றனர்

பிரிட்டனில் முடக்கநிலையின்போது வாங்கிய நாய்களை அதிகமானோர் தத்துக் கொடுக்க எண்ணுவதாகத் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

பிரிட்டனில் முடக்கநிலையின்போது வாங்கிய நாய்களை அதிகமானோர் தத்துக் கொடுக்க எண்ணுவதாகத் தெரியவந்துள்ளது.

அது குறித்து BBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

கடந்த சில வாரங்களில், நாய்களை தத்துக் கொடுப்பது குறித்த தொலைபேசி அழைப்புகள் 35 விழுக்காடு அதிகரித்துள்ளதாக Dogs Trust எனும் விலங்கு நலன் அறநிறுவனம் கூறியது.

நாய்களை ஒப்படைக்கும் விவரம்கொண்ட அதன் இணையப்பக்கத்தை மேலும் அதிகமானோர் நாடுவதாக Dogs Trust குறிப்பிட்டது.

கிருமிப்பரவல் தொடங்கியபோது பெரும்பான்மை மக்கள் வீட்டில் இருந்தனர்.

அதற்கு ஏற்ப, பிரிட்டனில் செல்லப்பிராணிகளை வாங்கும் போக்கு கணிசமாக அதிகரித்தது.

தற்போது அங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, உரிமையாளர்கள் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

செல்லப்பிராணிகளை வைத்துக்கொள்ளமுடியுமா என்று யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று BBC குறிப்பிட்டது.

பிரிட்டனில் தற்போது 12 மில்லியன் நாய்கள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்