Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலக அளவில் உருமாறி வரும் கொரோனா கிருமி...

கொரோனா கிருமி அதிக அளவில் உருமாறி வருவது உலக அளவில் சுகாதாரத்துறைக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது.  

வாசிப்புநேரம் -

கொரோனா கிருமி அதிக அளவில் உருமாறி வருவது உலக அளவில் சுகாதாரத்துறைக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது.

சென்ற டிசம்பர் மாதம் பிரிட்டனில் B117 என்ற புதுவகைக் கிருமியின் உருமாற்றம், அடையாளம் காணப்பட்டது.

பிறகு, தென்னாப்பிரிக்காவில் B1351 எனும் புதிய வகைக் கிருமி அடையாளம் காணப்பட்டது.

ஜனவரி மாதம், பிரேசிலில் இருந்து திரும்பியவர்களிடம் P-1 என்ற வகைக் கிருமி உறுதி செய்யப்பட்டது. ஜப்பான் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில், அந்தக் கிருமி அடையாளம் காணப்பட்டது.

சென்ற மாதம் தோக்கியோ மருத்துவமனைகளில் கொரோனா கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 70 விழுக்காட்டினருக்கு, Eek என்ற கிருமி வகை உறுதி செய்யப்பட்டது.

இரட்டிப்பாக உருமாற்றம் அடையும் கிருமி கலிஃபோர்னியாவிலும், இந்தியாவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு உருமாறி வரும் புதிய வகைக் கிருமிகள் வேகமாகப் பரவும் தன்மை கொண்டவை. அவை எதிர்ப்புச் சக்தியை மட்டுப்படுத்தி, தடுப்பூசிகளின் செயல்திறனையும் பாதிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்