Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விண்வெளிக்குச் செல்லத் திட்டமிடும் பிரிட்டிஷ் செல்வந்தர்

Virgin குழுமத்தின் தலைவரும் பிரிட்டிஷ் செல்வந்தருமான ரிச்சர்ட் பிரான்சன் (Richard Branson) விண்வெளிக்குச் செல்லத் திட்டமிடுகிறார்.

வாசிப்புநேரம் -
விண்வெளிக்குச் செல்லத் திட்டமிடும் பிரிட்டிஷ் செல்வந்தர்

படம்: Reuters/Mike Blake

Virgin குழுமத்தின் தலைவரும் பிரிட்டிஷ் செல்வந்தருமான ரிச்சர்ட் பிரான்சன் (Richard Branson) விண்வெளிக்குச் செல்லத் திட்டமிடுகிறார்.

தமக்குச் சொந்தமான Virgin Galactic விண்கலத்தில் செல்ல அவர் திட்டமிடுகிறார்.

அந்தப் பயணம் அடுத்த சில மாதங்களுக்குள் இடம்பெறலாம் என அவர் கூறினார்.

அமெரிக்காவின் Apollo-eleven விண்கலம், நிலவில் தரையிறங்கிய ஐம்பதாம் ஆண்டுநிறைவை அனுசரிக்கும் வகையில், அந்தப் பயணத்தை மேற்கொள்ள விரும்புவதாகத் திரு. பிரான்சன் குறிப்பிட்டார்.

சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் குறுகிய விண்வெளிப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யும் இரண்டு நிறுவனங்களில் ஒன்று Virgin Galactic. மற்றொன்று Blue Origin.

மற்றொரு நிறுவனமான Space-X, ஜப்பானியச் செல்வந்தர் ஒருவரை 2023ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு அனுப்பத் திட்டமிடுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்