Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

100,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டியை எதிர்பாரா விதமாகக் கண்டுபிடித்த ஆடவர்

ஆஸ்திரேலியாவின் கல்கூர்லி(Kalgoorlie) பகுதியில் உள்ள ஓர் ஆடவருக்கு இன்ப அதிர்ச்சி.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் கல்கூர்லி(Kalgoorlie) பகுதியில் உள்ள ஓர் ஆடவருக்கு இன்ப அதிர்ச்சி.

தங்கச் சுரங்கத்திற்கு அருகே உலோகம் கண்டுபிடிக்கும் கருவியைக் கொண்டு 100,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டியை அவர் தோண்டியெடுத்தார்.

பொழுதுபோக்குக்காக எதையோ தேடிச் செல்லும் போது ஆடவருக்கு எதிர்பாரா விதமாக அந்தப் பரிசு கிடைத்ததாக அப்பகுதி மக்கள் கூறினர்.

ஆஸ்திரேலியாவில் தோண்டியெடுக்கப்படும் முக்கால்வாசித் தங்கம் கல்கூர்லியிலும், அதனைச் சுற்றியப் பகுதிகளிலும் கிடைக்கிறது.

அதனால் அங்கு அவ்வப்போது சிறு சிறு தங்கக் கட்டிகள் மக்களுக்குக் கிடைப்பது வழக்கம் என்று வட்டாரவாசிகள் கூறினர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்