Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 கிருமித்தொற்று - சரியும் பங்குச் சந்தை - அதிகரிக்கும் தங்கம் விலை

COVID-19 கிருமித்தொற்றால் உலகப் பங்குச் சந்தைகள் பாதிக்கப்படும் வேளையில், பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்புவதால், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 கிருமித்தொற்று - சரியும் பங்குச் சந்தை - அதிகரிக்கும் தங்கம் விலை

(படம்: Pixabay)

COVID-19 கிருமித்தொற்றால் உலகப் பங்குச் சந்தைகள் பாதிக்கப்படும் வேளையில், பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்புவதால், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

தென்கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளிலும் கிருமிப்பரவல் அதிகரித்திருப்பது பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்குக் காரணமானது.

அமெரிக்காவின் Dow குறியீடு ஈராண்டு காணாத அளவு சரிந்துள்ளது.

இழப்பு நேருமோ என்ற அச்சத்தால் பலர் பங்குகளை விற்கும் வேளையில் எண்ணெய் விலை குறைந்துள்ளது.

ஓர் அவுன்ஸ் தங்கம் விலை சுமார் 1,689 டாலருக்கு உயர்ந்துள்ளது. நிலையற்ற பொருளியல் சூழலில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கையாகத் தங்கத்தை வாங்குகின்றனர்.

சீனாவில் கிருமித்தொற்று உச்சத்தைத் தொட்டுவிட்டாலும், உலக நாடுகளில் நோய்ப்பரவல் அதிகரிப்பது மிகுந்த அக்கறைக்குரியது என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் ஏற்பட்டுள்ள வர்த்தக முடக்கம், மற்ற நாடுகளிலும் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்