Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் கூகள்

அரசியல் விளம்பரங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது கூகள். 

வாசிப்புநேரம் -

அரசியல் விளம்பரங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது கூகள்.

வரும் மாதங்களில் அரசியல் விளம்பரதாரர்களின் செய்திகளைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது புதிய கொள்கை.

பயனீட்டாளர்களின் அரசியல் விருப்பம் அல்லது பொது வாக்காளர் பதிவு ஆவணம்-ஆகியவற்றின் அடிப்படையில் விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்படும்.

வாக்காளர்களின் வயது, பாலினம், அஞ்சல் குறியீட்டு எண் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது விளம்பரம் செய்ய முடிகிறது.

ஆனால், குறிப்பிட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டு செயல்பட அனுமதியில்லை.

பிரிட்டனில், அடுத்த வாரம் புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தவிருக்கிறது கூகள்.

ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் புதிய விதி நடைமுறைப்படுத்தப்படும்.

அடுத்த ஆண்டு ஜனவரி ஆறாம் தேதியிலிருந்து உலக அளவில் புதிய விதி நடப்புக்கு வரும்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்