Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உயர் தொழில்நுட்ப விளையாட்டுகளை மக்கள் கைக்குக் கொண்டுவர Google-இன் புதிய திட்டம்

Google நிறுவனம் 'Stadia' என்னும் இணைய நேரடி ஒளிபரப்பில் விளையாடக்கூடிய புதிய தளம் குறித்து அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
உயர் தொழில்நுட்ப விளையாட்டுகளை மக்கள் கைக்குக் கொண்டுவர Google-இன் புதிய திட்டம்

படம்: Reuters

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Google நிறுவனம் 'Stadia' என்னும் இணைய நேரடி ஒளிபரப்பில் விளையாடக்கூடிய புதிய தளம் குறித்து அறிவித்துள்ளது.

சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற விளையாட்டு மேம்பாட்டாளர் மாநாட்டில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்தது.

180 பில்லியன் டாலர் மதிப்புமிக்க அந்தச் சந்தையில், Google நிறுவனம் கால்பதிக்கத் திட்டமிடுவது குறித்து அறிவித்தது.

'Stadia' என்பது தளத்தின் பெயர். அதில் விளையாட்டாளர்கள் எந்தவொரு விலையுயர்ந்த விளையாட்டுச் சாதனங்களையும் பயன்படுத்தாமல் விளையாட முடியும் என்று Bloomberg நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிட்டது.

ஏற்கனவே Android தளத்தின் App Store வழி மின்னிலக்க விளையாட்டுகளில் பெரும் பங்குவகித்துவருகிறது, Google நிறுவனம்.

Stadia மூலம் சிக்கலான பல விளையாட்டுகளை பலரது கைகளுக்குக் கொண்டுசெல்வது நோக்கம் என்று Google தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்