Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கூகிள் உங்கள் தகவல்களைச் சேமிப்பதை நிறுத்துவது எப்படி?

கூகிளில் நாம் நாள்தோறும் பலவற்றை உள்ளிட்டுத் தேடுகிறோம். ஒவ்வொரு முறையும் நாம் தேடுவதைக் கூகிள் சேகரித்து வைக்கிறது. அந்தத் தகவல்கள் விளம்பரங்களை அனுப்ப வகைசெய்கின்றன.

வாசிப்புநேரம் -

கூகிளில் நாம் நாள்தோறும் பலவற்றை உள்ளிட்டுத் தேடுகிறோம். ஒவ்வொரு முறையும் நாம் தேடுவதைக் கூகிள் சேகரித்து வைக்கிறது. அந்தத் தகவல்கள் விளம்பரங்களை அனுப்ப வகைசெய்கின்றன.

தேடல்களின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களை அழிக்க வகை செய்யும் தெரிவை கூகிள் மே மாதம் அறிமுகம் செய்தது.

வரும் மாதங்களில் Google Mapsஇல் தனிப்பட்ட தேடும் அம்சமும் (private mode) வெளியிடப்படவுள்ளது.

தனிப்பட்ட தகவல்களை கூகிளிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கச் சில வழிகள்...

- myactivity.google.com என்ற இணையப்பக்கத்துக்குச் செல்லவும்.

- Activity Controls அம்சத்தின் கீழ் Web & App Activityயைத் தெரிவுசெய்யவும்.

- அதில் Manage Activity என அம்சம் இருக்கும்.

- கூகிளின் கீழ் இயங்கும் சேவைகளில் எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை தகவல்களை அழிப்பது என்று தீர்மானிக்கலாம். பிறகு, தானாகவே அந்தத் தகவல்கள் அழிக்கப்படும்

- Google Assistant, Google Play சேவைகளிலும் தகவல்களை அழிக்கும் வசதி உண்டு.

Facebook, Twitter, போன்ற சமூக ஊடங்கங்களைக் காட்டிலும் தனிநபர் தகவலைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கூகிள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்