Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கண் பார்வைப் பிரச்சினைகளைக் கண்டறியும் கூகுளின் தொழில்நுட்பம்

மருத்துவர்களைவிட மிகத் துல்லியமாகக் கண்பார்வை சோதனை முடிவுகளைக் கொடுக்கும் ஆற்றல் அதற்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கண் பார்வைப் பிரச்சினைகளைக் கண்டறியும் கூகுளின் தொழில்நுட்பம்

(படம்: Pixabay)

கண்பார்வை தொடர்பான 50 வகைப் பிரச்சினைகளைக் கண்டறியும் மருத்துவத் தொழில்நுட்பத்தை உருவாக்க கூகுளின் செயற்கை நுண்ணறிவு வர்த்தகப் பிரிவு திட்டம் கொண்டுள்ளது.

மருத்துவர்களைவிட மிகத் துல்லியமாகக் கண்பார்வை சோதனை முடிவுகளைக் கொடுக்கும் ஆற்றல் அதற்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

விழித்திரையின் முப்பரிமாணச் சோதனைகளை DeepMind's AI எனும் தொழில்நுட்பம் வழங்கும்.

கண் அழுத்த நோய், நீரிழிவு நோய் தொடர்பில் ஏற்படும் கண் பிரச்சினைகள் போன்றவற்றை முன்கூட்டியே கண்டுபிடிக்க அந்தத் தொழில்நுட்பம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தாண்டு அதற்கான முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது வெற்றிகரமாக அமைந்தால் பிரிட்டனில் அதனை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனுமதிக்கு விண்ணப்பிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்