Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஏ...தோ... ஒரு பாட்டு.... அடையாளம் காணமுடியாமல், தவித்ததுண்டா? உதவி செய்யும் புதிய கூகள் அம்சம்

ஏ...தோ...ஒரு பாட்டு மனத்தில் திடீரென்று தோன்றும்போது அதை அடையாளம் காணமுடியாமல், தவித்ததுண்டா?

வாசிப்புநேரம் -
ஏ...தோ... ஒரு பாட்டு.... அடையாளம் காணமுடியாமல், தவித்ததுண்டா? உதவி செய்யும் புதிய கூகள் அம்சம்

(படம்: YouTube/Google)

ஏ...தோ...ஒரு பாட்டு மனத்தில் திடீரென்று தோன்றும்போது அதை அடையாளம் காணமுடியாமல், தவித்ததுண்டா?

நம்மில் பலருக்கு அந்த அனுபவம் இருந்திருக்கலாம்...

இனி... அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை!

கைத்தொலைபேசிகளின் கூகள் செயலி வழியாகவும், Google Assistant அம்சம் வழியாகவும், பாடலின் ராகத்தைப் பாடியே அதை அடையாளம் காணமுடியும்.

நேற்று அந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.

செயலியில், மக்கள் குரல் வழி தேடும் சேவை(mic) மூலம் “what's this song?” என்று கேள்வி எழுப்பவேண்டும்.

அவர்கள் பின்னர் பாடலின் ராகத்தை 15 விநாடிகள் வரை முணுமுணுத்தால் கூடப் போதும்.... அந்தப் பாட்டை கூகள் அடையாளம் கண்டுவிடும்.

தற்போது iOS மென்பொருளில்...கூகளின் புதிய அம்சம் ஆங்கிலத்தில் மட்டுமே இயங்கும்.

Android மென்பொருளில், புதிய அம்சம் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் வேலை செய்யும். வருங்காலத்தில் அது மேலும் பல மொழிகளுக்கு விரிவுபடுத்தப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்