Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'அறிவு புதையல் போன்றது' - 96 வயதில் பட்டம் பெற்ற மாணவர்

இத்தாலியில் 96 வயது மாணவர் பட்டம் பெற்றுள்ளார். இத்தாலியின் ஆக மூத்த மாணவராகக் கருதப்படும் Giuseppe Paterno வாழ்வில் பல சோதனைகளை எதிர்நோக்கியவர். 

வாசிப்புநேரம் -
'அறிவு புதையல் போன்றது' - 96 வயதில் பட்டம் பெற்ற மாணவர்

படம்: Reuters

இத்தாலியில் 96 வயது மாணவர் பட்டம் பெற்றுள்ளார். இத்தாலியின் ஆக மூத்த மாணவராகக் கருதப்படும் Giuseppe Paterno வாழ்வில் பல சோதனைகளை எதிர்நோக்கியவர்.

சிறுவயதில் ஏழ்மை, போர், அண்மையில் கொரோனா கிருமிப்பரவல் ஆகியவை அவரை வெகுவாகப் பாதித்தன. இருப்பினும் வைராக்கியத்துடன் படித்து பட்டம் பெற்றுள்ளார்.

அவருக்குப் புத்தகங்கள் என்றால் கொள்ளை ஆசை. ஆனால் சிறு வயதில் படிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

90 வயதைத் தாண்டிய பிறகு தான் Paterno பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க முடிவெடுத்தார்.

Palermo பல்கலைக்கழகத்தில் வரலாறு, தத்துவம் ஆகிய பாடங்களைக் கற்றார்.

3 ஆண்டுப் படிப்பை வெற்றிகரமாக முடித்து குடும்பத்தினர், ஆசிரியர்கள், அவரை விட 70 வயதுக்கு மேல் குறைந்த சக மாணவர்கள் முன்னிலையில் அவர் பட்டம் பெற்றார்.

'அறிவு புதையல் போன்றது ' என்று Giuseppe Paterno கூறினார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்