Images
  • grand hyatt
    (படம்: Jeremy Long)

'Grand Hyatt ஹோட்டல் சந்திப்பு கொரோனா கிருமி அதிகம் பரவக் காரணமானது என்று கூறுவது மிகையானது'

Grand Hyatt ஹோட்டலில் நடந்த அனைத்துலகப் பேராளர்களுக்கான சந்திப்பு கொரோனா கிருமி அதிகம் பரவக் காரணமாக இருந்தது என்று கூறுவது மிகையானது என்று உலக சுகாதார நிறுவன நிபுணர் கூறியுள்ளார். 

உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை விவகாரங்களைக் கையாளும் டாக்டர் மைக் ரயன் அதனைத் தெரிவித்தார். 

சென்ற மாதம் 20ஆம் தேதிக்கும் 22ஆம் தேதிக்கும் இடையே சிங்கப்பூரின் Grand Hyatt ஹோட்டலில் அந்தச் சந்திப்பு நடைபெற்றது. 

அதில் வூஹானைச் சேர்ந்த பேராளர்களும் கலந்துகொண்டனர். அதில் கலந்துகொண்ட பேராளர்களில் சுமார் 12 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. அதில் ஐவர் பிரான்சைச் சேர்ந்தவர்கள், மூவர் சிங்கப்பூர்வாசிகள், ஒருவர் தென் கொரியர், ஒருவர் மலேசியர், மற்றொருவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். 
ஒரு நாட்டில் 10க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கும் வேளையில், அந்தச் சந்திப்பு அதிகமான பரவலுக்கு வழிவகுத்தது என்று கூறுவது மிகையான கருத்து என்றார் டாக்டர் ரயன். 

Top