Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆகாய சாகசத்தில் சாதனை படைத்த 102 வயது மூதாட்டி

தென் ஆஸ்திரேலியாவில் விமானத்திலிருந்து 4,300 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து சாகசம் புரிந்துள்ளார் 102 வயது மூதாட்டி ஐரீன் ஓ'ஷி.

வாசிப்புநேரம் -
ஆகாய சாகசத்தில் சாதனை படைத்த 102 வயது மூதாட்டி

(படம்: AFP/Bryce Sellick, Matt Teager)

தென் ஆஸ்திரேலியாவில் விமானத்திலிருந்து 4,300 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து சாகசம் புரிந்துள்ளார் 102 வயது மூதாட்டி ஐரீன் ஓ'ஷி.

மணிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் Skydive செய்தது சாதாரணமாய்த் தெரிந்ததாகச் சொன்னார் ஓ'ஷி.

தசை தொடர்பான நரம்பணு நோய்க்கு நிதிதிரட்டும் நோக்கில் அவர் அந்தச் சாகசத்தைப் புரிந்தார்.

2016ஆம் ஆண்டு தொடங்கியது இவரின் சாகசப் பயணம்.
ஈராண்டு கழித்து மீண்டும் செய்த சாகசம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

"பார்ப்பதற்குத் தெளிவாக இருந்தது. வானிலையும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் குளிர் வாட்டியது."
என்று மூதாட்டி கூறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்