Images
  • reef
    படம்: AFP

Great Barrier Reef பவளப்பாறையின் நிலைமை கவலைக்கிடம்

Great Barrier Reef பவளப்பாறை, கடந்த ஓராண்டில் சேதத்திலிருந்து ஓரளவு மீண்டுவந்தபோதும் அதன் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலக மரபுடைமைத் தலமான அந்த பவளப்பாறை, ஆபத்தை எதிர்நோக்கும் இடங்களின் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு, ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனம் (UNESCO) கடந்த மாதம் பரிந்துரைத்தது.

பெரும்பாலும் பருவநிலை மாற்றத்தால் பவளப்பாறைக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பவளப்பாறையை அந்தப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை ஐக்கிய நாட்டு நிறுவன உலக மரபுடைமைக் குழுவின் இவ்வாண்டுக் கூட்டத்தை ஏற்று நடத்தும் சீனத் தரப்பு தற்காத்துப் பேசியுள்ளது.

இணையம் மூலமாகவும் சீனாவின் ஃபூஸோ(Fuzhou) நகரில் நேரடியாகவும் அந்தக் குழு அடுத்த 2 வாரங்களுக்குச் சந்தித்து அது பற்றிப் பரிசீலிக்கும் என்று கூறப்படுகிறது.

-AFP, AP 

Top