Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கிரீஸில் முதல் COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவம் உறுதி

கிரீஸில் முதல்முறையாக ஒருவருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கிரீஸில் முதல் COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவம் உறுதி

(படம்: REUTERS/Guglielmo Mangiapane/File Photo)


கிரீஸில் முதல்முறையாக ஒருவருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அந்த 38 வயதுப் பெண் இத்தாலியின் வடக்குப் பகுதிக்குப் பயணம் மேற்கொண்டவர் என்று கிரீஸின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவக் குழு அவரைக் கண்காணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவருடன் தொடர்புகொண்டவர்களை அடையாளங்கண்டு தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அதிகாரிகள்.

COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை வழங்க கிரீஸில் 13 மருத்துவமனைகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

அத்துடன், பொது இடங்களில் பலவற்றையும் அந்நாட்டு அரசாங்கம் மூடியுள்ளது.

அதிக கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கொண்ட நாடுகளுக்குப் பயணத் தடையும் விதித்துள்ளது கிரீஸ்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்