Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிகரிக்கும் வெப்பம் - முடக்கத்தை மீறும் கிரேக்கர்கள்

கிரீஸில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. வெப்ப அலையால் சூட்டைத் தாங்க முடியாமல், கிரேக்கர்கள் முடக்க விதிகளைப் புறக்கணிக்கத்  தொடங்கியுள்ளனர். 

வாசிப்புநேரம் -
அதிகரிக்கும் வெப்பம் - முடக்கத்தை மீறும் கிரேக்கர்கள்

படம்: AFP / Louisa GOULIAMAKI

கிரீஸில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. வெப்ப அலையால் சூட்டைத் தாங்க முடியாமல், கிரேக்கர்கள் முடக்க விதிகளைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த சென்ற ஆண்டு நவம்பரில் அங்கு முடக்கம் அறிவிக்கப்பட்டது.

கிரீஸில் வெப்பநிலை தற்போது 28 டிகிரி செல்சியஸ்.

அதனால் சூட்டைத் தணிக்க கடற்கரைகளுக்கும், பூங்காக்களுக்கும் விரைந்து செல்கின்றனர் மக்கள்.

ஏதன்ஸின் தேசிய ஆய்வகத்தின்படி, தெற்கு தீவான கிரீட்டில் (Crete) அமைந்திருக்கும் நகர் ஒன்றில், வெப்பநிலை 28.3 டிகிரி செல்சியஸாக பதிவானது.

கடந்த 50 ஆண்டுகளில் ஜனவரி மாதம் பதிவான ஆக அதிக வெப்பம் அது.

வழக்கமாக, இந்தப் பருவத்தில் ஏதன்ஸில் வெப்பம் சுமார் 15 டிகிரி செல்சியஸாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

நல்ல வானிலை நிலவுவதால், வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்காமல், வெளியே செல்வது நன்றாய் இருப்பதாகச் சிலர் கருதுகின்றனர்.

ஒலிபெருக்கிகள் மூலம் கிரேக்க அதிகாரிகள், பொது இடங்களில் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்