Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவிடம் கிரீன்லந்தை விற்பது அபத்தமானது : டென்மார்க்

கிரீன்லந்து விற்பனைக்கு இல்லை என்றும், அதை அமெரிக்காவிடம் விற்பது என்பது அபத்தமானது என்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் (Mette Frederiksen) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவிடம் கிரீன்லந்தை விற்பது அபத்தமானது : டென்மார்க்

(படம்: Reuters)

கிரீன்லந்து விற்பனைக்கு இல்லை என்றும், அதை அமெரிக்காவிடம் விற்பது என்பது அபத்தமானது என்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் (Mette Frederiksen) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த வாரம் கிரீன்லந்தை வாங்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து கிரீன்லந்து விற்பனைக்கு இல்லை என்று அதை நிர்வாகம் செய்யும் டென்மார்க் பதில் கூறியது.

கிரீன்லந்து டென்மார்க் இல்லை என்றும், கிரீன்லந்து கிரீன்லந்துக்கு சொந்தமானது என்றும் டென்மார்க் பிரதமர் தெரிவித்தார்.

கிரீன்லந்து வர்த்தகத்தை வரவேற்கிறது, ஆனால் அது விற்பனைக்கு இல்லை என்று கிரீன்லந்து வெளியுறவு அமைச்சும் பதில் கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் கிரீன்லந்து, டென்மார்க பகுதிகளில் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்விருக்கிறார்.
  
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்