Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இயந்திரம் இல்லா படகில் அட்லாண்டிக் கடலைக் கடக்கும் இளம்பெண்

16 வயது கிரேட்டா தன்பெர்க் (Greta Thunberg) அட்லாண்டிக் கடலைக் கடக்கும் முயற்சியைப் படகு ஒன்றில் தொடங்கியுள்ளார்.

வாசிப்புநேரம் -
இயந்திரம் இல்லா படகில் அட்லாண்டிக் கடலைக் கடக்கும் இளம்பெண்

(படம்: AFP/Ben STANSALL)

இங்கிலாந்து: 16 வயது கிரேட்டா தன்பெர்க் (Greta Thunberg) அட்லாண்டிக் கடலைக் கடக்கும் முயற்சியைப் படகு ஒன்றில் தொடங்கியுள்ளார்.

இங்கிலாந்திலிருந்து நியூயார்க் செல்லவிருக்கும் அவருடைய படகில் இயந்திரங்கள் ஏதும் இல்லை.

முற்றிலும் சூரிய சக்தித் தகடுகளாலும் நீர்ச்சுழலியாலும் இயங்குகிறது படகு.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் இயற்கை ஆர்வலரான தன்பெர்க் எவ்வித எரிபொருள் கழிவும் இல்லாமல் தம் பயணத்தை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளார்.

அவர் செல்லும் படகில் கழிப்பறைகளோ குளிக்கும் வசதியோ இல்லை. உலர்ந்த உணவுப் பொருள்களை மட்டுமே அவர் பயணத்தின்போது உண்பார்.

சுவீடனில் மாணவியாக இருந்தபோது தம்மால் பருவநிலை மாற்றத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியவில்லை என்கிறார் தன்பெர்க். நூதனமான பிரசார முறைகளைக் கையாளும்போது தாம் சொல்வதை மற்றவர்கள் கூர்ந்து கவனிப்பதாக அவர் கூறுகிறார்.

பள்ளிப் படிப்பிலிருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துள்ள தன்பெர்க், அமெரிக்கக் கண்டங்களுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்