Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூஸிலந்து : துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களில் மேலும் மாற்றங்கள்

நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன், துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களில் மேலும் மாற்றங்களை முன்வைத்திருக்கிறார்.  

வாசிப்புநேரம் -

நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன், துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களில் மேலும் மாற்றங்களை முன்வைத்திருக்கிறார்.

கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு நடந்து ஆறு மாதம் ஆகவிருக்கும் வேளையில் சட்டங்களை மேலும் கடுமையாக்குவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவர் இன்று மசோதாவைத் தாக்கல் செய்தார்.

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் மனநல ஆதரவு வழங்கவும் திருமதி ஆர்டன் உறுதியளித்தார்.

இவ்வாண்டு மார்ச் 15ஆம் தேதி துப்பாக்கி ஏந்திய ஒரு தனிநபர் வெள்ளிக்கிழமைத் தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல் நடத்தியதில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் பலர் காயமடைந்தனர்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்