Images
  • gun reforms NZ (1)
    (படம்: AFP/Tessa Burrowsw)

துப்பாக்கி தொடர்பிலான சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும்: நியூசிலந்து பிரதமர் உறுதி

தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கி உரிமம் கொண்டிருந்ததாக நியூசிலந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன் கூறியிருக்கிறார்.

அந்த நபர், சில ஆயுதங்களைக் கொண்டிருந்ததாகவும் திருவாட்டி ஆர்டன் சொன்னார்.

அது தொடர்பிலான சட்டங்களில் திருத்தங்களைச் செய்வதற்கு அவர் உறுதிதெரிவித்தார்.

நேற்றைய தாக்குதல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

பாதிக்கப்படடவர்களுக்கு உதவ, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளுடன் நியூசிலந்து அரசாங்கம் பணியாற்றி வருவதாகத் திருவாட்டி ஆர்டன் தெரிவித்தார்.

தாக்குதல்கள் நடத்தப்பட்ட கிரைஸ்ட்சர்ச் (Christchurch) நகருக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் நியூசிலந்து பிரதமர் கூறினார்.

Top