Images
  • ;o;lice
    (படம்: Pixabay)

ஆஸ்திரேலியாவில் கைதுசெய்யப்படும்போது தலையில் உதைக்கப்பட்டதால் சுயநினைவு இழந்த ஆடவர்

ஆஸ்திரேலியாவில் ஆடவர் ஒருவர்
கைதுசெய்யப்படும்போது காவல்துறை வாகனத்தால் மோதப்பட்டு தலையில் உதைக்கப்பட்டதால் சுயநினைவை இழந்தார்.

32 வயது ஆடவர் தற்போது மெல்பர்னில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மனநலப் பிரச்சினைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆடவர் தப்பிக்க முயன்றதால் மருத்துவ ஊழியர்கள் காவல்துறைக்கு அழைத்தனர்.

காணொளி ஒன்றில் சாலையைக் கடக்கும் ஆடவர், காவல்துறை வாகனத்தால் மோதப்படுவது தெரிகிறது. மற்றொரு காணொளியில் ஆடவரின் தலையில் அதிகாரி ஒருவர் உதைக்கிறார். பின்னர் மேலும் ஐவர் அவரை வல்லந்தமாகத் தரையில் தடுத்துவைப்பது தெரிகிறது.

காவல்துறை அதிகாரிகள் அளவுக்கு அதிகமான வன்முறையைப் பயன்படுத்தியதாக ஆடவரின் தந்தை குற்றஞ்சாட்டினார்.

அதன் தொடர்பில், தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

ஆடவரைக் கட்டுப்படுத்த அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக காவல்துறை அதன் அதிகாரிகளைத் தற்காத்துப் பேசியுள்ளது.

ஆடவருக்கு ஏற்பட்ட காயங்கள் முழுமையாகப் பரிசோதிக்கப்படுவதாக அவரின் வழக்குரைஞர் கூறினார்.

ஆடவர் கைதுசெய்யப்படும் காணொளி அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாய் அவர் சொன்னார்.  

Top