Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மியன்மார்மீது தொடுக்கப்பட்டுள்ள இனப் படுகொலை குற்றச்சாட்டுகளை எதிர்க்கவுள்ளார் திருவாட்டி ஆங் சான் சூச்சி

மியன்மாரின் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி, தமது அரசாங்கத்தின்மீது தொடுக்கப்பட்டுள்ள இனப் படுகொலை குற்றச்சாட்டுகளை எதிர்த்து, அனைத்துலக நீதிமன்றத்தில் விவாதிக்கவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
மியன்மார்மீது தொடுக்கப்பட்டுள்ள இனப் படுகொலை குற்றச்சாட்டுகளை எதிர்க்கவுள்ளார் திருவாட்டி ஆங் சான் சூச்சி

(படம்: Reuters/Chalinee Thirasupa)

மியன்மாரின் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி, தமது அரசாங்கத்தின்மீது தொடுக்கப்பட்டுள்ள இனப் படுகொலை குற்றச்சாட்டுகளை எதிர்த்து, அனைத்துலக நீதிமன்றத்தில் விவாதிக்கவிருக்கிறார்.

வழக்கு விசாரணை அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது.

அதில் மியன்மார் அரசாங்கத் தரப்புக் குழுவைத் திருவாட்டி சூச்சி வழிநடத்திச் செல்லவிருக்கிறார்.

ரொஹிஞ்சா முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனப் படுகொலையை மேற்கொண்டதாக மியன்மார் அரசாங்கம் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறது.

திருவாட்டி சூச்சி, மியன்மாரின் நலனைத் தற்காத்து நீதிமன்றத்தில் பிரதிநிதிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் இருந்து, மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் ராணுவம் வன்முறை தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, சுமார் 700,000க்கும் அதிகமான ரொஹிஞ்சா முஸ்லிம் மக்கள் அண்டை நாடான பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்