Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹஜ் 2019 - முக்கியத் தகவல்கள்

உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவுதி அரேபியாவின் புனித மக்கா நகரில் கூடியுள்ளனர். வருடாந்தர ஹஜ் கிரியைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. 

வாசிப்புநேரம் -
ஹஜ் 2019 - முக்கியத் தகவல்கள்

படம்: AFP

உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவுதி அரேபியாவின் புனித மக்கா நகரில் கூடியுள்ளனர். வருடாந்தர ஹஜ் கிரியைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

ஹஜ் பயணம் - முக்கியத் தகவல்

* இந்த ஆண்டு சுமார் இரண்டரை மில்லியன் பேர் கூடுவர். சென்ற ஆண்டு ஹஜ் செய்தவர்களின் எண்ணிக்கை 2.37 மில்லியன்.

* 2016 இல் ஹஜ் செய்தவர்கள் 1.86 மில்லியன் பேர். 1941 ஆம் ஆண்டு 24,000 பேர் மட்டுமே ஹஜ் கடமையை நிறைவேற்றினர்.

* ஆயிரக்கணக்கான ஊழியர்கள் புனிதப் பயணிகளின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* 17,000 க்கும் அதிகமானோரும் பாதுகாப்புச் சேவையில் இணைந்துள்ளனர்.

* புனிதக் கடமையை நிறைவேற்றச் செல்லும் வழிகளில் ஆயிரக்கணக்கான கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

* அவசரச் சேவைக்காக 25 மருத்துவமனைகளும் 156 மருத்துவ நிலையங்களும் ஆயத்தமாக உள்ளன.

* நெருக்கடியின்போது மருத்துவ உதவி வழங்குவதற்காகப் பயிற்சிபெற்ற சுகாதாரப் பராமரிப்பாளர்கள் 30,000 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

* புனிதப் பயணிகள் தங்குவதற்காகக் குளிரூட்டப்பட்ட 350,000 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* சுமார் 2.7 மில்லியன் புனிதப் பயணிகளுக்காக மக்கா, மதீனா நகரங்களில் 5,600 ஹோட்டல்கள், அடுக்ககங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

* யாத்ரீகர்களுக்காக சுமார் 3,000க்கும் அதிகமான அனைத்துலக விமானங்கள் சேவை வழங்கியுள்ளன.

* புனித மக்காவில் சுமார் 25,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்