Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூஸிலந்துத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் - மாண்டோருக்கு மரியாதை செலுத்த நடனம் புரியும் மக்கள்

நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்த நாடெங்கும் பலர் சிறப்பு நடனம் புரிந்து வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
நியூஸிலந்துத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் - மாண்டோருக்கு மரியாதை செலுத்த நடனம் புரியும் மக்கள்

(படம்: REUTERS/Joseph Campbell/File Photo)

நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்த நாடெங்கும் பலர் சிறப்பு நடனம் புரிந்து வருகின்றனர்.

இரண்டு பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் மாண்டனர்.

அவர்களுக்கு மரியாதை செலுத்த நியூஸிலந்துப் பூர்வகுடியினரான மௌரி இனத்தவர் ஆடும் ஹக்கா நடனத்தை அங்குள்ள மக்கள் ஆடுகின்றனர்.

மௌரி இனத்தவரின் மொழியில் சில வாசகங்களை உரக்கக் கத்திக்கொண்டே கால்களை மிதித்தும், துடைகளை அடித்தும் இந்த ஹாக்கா நடனத்தை நியூஸிலந்து மக்கள் ஆடுகின்றனர்.

இன, மொழி, சமய வேற்றுமைகளைக் கடந்து மக்கள் ஒன்றுகூடி இந்த நடனத்தை ஆடி மாண்டோருக்கு மரியாதை செலுத்தினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்