Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பாவில் உள்ள பெரியவர்களில் பாதிப் பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர்

ஐரோப்பாவில் உள்ள பெரியவர்களில் பாதிப் பேருக்கு மேல் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

ஐரோப்பாவில் உள்ள பெரியவர்களில் பாதிப் பேருக்கு மேல் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில், அண்மையில் டெல்ட்டா வகைக் கிருமிப்பரவல் அதிகரித்துள்ள நிலையில், அந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

200 மில்லியனுக்கும் மேற்பட்ட ஐரோப்பியர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜெர்மனியிலும், பிரிட்டனிலும் கிருத்தொற்றுச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.

மேலும் அதிகமானோரைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி, ஜெர்மானியப் பிரதமர் ஏங்கலா மெர்க்கல் (Angela Merkel) கேட்டுக்கொண்டார்.

பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில், குறிப்பிட்ட சில நடவடிக்கைகளில் ஈடுபடச் சுகாதாரச் சான்றுகளைக் காட்டும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோடைக்காலத்திற்குள், பெரியவர்களில் 70 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள, ஐரோப்பா இலக்கு நிர்ணயித்துள்ளது.

- AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்