Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'நொவல் கொரோனா கிருமி பரவல் பெரிய நெருப்பாக உருமாறக்கூடிய தீப்பொறி' - உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம், சீனாவுக்குச் செல்லாதவர்களிடமும் புதிய வகை கொரோனா கிருமி பரவி வருவதை 'பெரிய நெருப்பாக உருமாறக்கூடிய தீப்பொறி' என்று வருணித்துள்ளது.

வாசிப்புநேரம் -

உலக சுகாதார நிறுவனம், சீனாவுக்குச் செல்லாதவர்களிடமும் புதிய வகை கொரோனா கிருமி பரவி வருவதை 'பெரிய நெருப்பாக உருமாறக்கூடிய தீப்பொறி' என்று வருணித்துள்ளது.

உலக நாடுகள், கிருமி பரவுவதைக் கூடுமான வரை கட்டுக்குள் வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்று அது வலியுறுத்தியது.

அதை முன்னிட்டு, நிறுவனத்தின் நிபுணர் குழு ஒன்று நேற்றிரவு பெய்ச்சிங்கைச் சென்றடைந்தது.

புதிய வகை கொரோனா கிருமி குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சீனாவுக்கு ஆதரவளிப்பதே குழுவின் முக்கியக் குறிக்கோள்.

குழுவில் சுமார் 15 பேர் உள்ளனர்.

கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் கைதேர்ந்த மருத்துவர் புரூஸ் ஈல்வார்ட் (Bruce Eilward) குழுவுக்குத் தலைமையேற்கிறார்.

சீன விஞ்ஞானிகளுடன் குழு இணைந்து செயல்படும்.

புதிய வகை கொரோனா கிருமியை சார்ஸை விட வேகமாக பரவினாலும் அதன் வீரியம் குறைவு என்று நிபுணர் குழுவின் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்