Images
  • drone (1)
    (படம்: Reuters)

பிரிட்டன்: விமான நிலையத்திற்கு அருகே ஆளில்லா வானூர்திகளைச் செலுத்தத் திட்டம் - 5 பேர் கைது

பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகே ஆளில்லா வானூர்திகளைப் பறக்க விடத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து பருவநிலை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமானங்கள் பறப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள வட்டாரத்தில் ஆளில்லா வானூர்திகளைப் பறக்க விட்டு விமானச் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக நம்பப்படுகிறது.

விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவது அதன் நோக்கம்.

மூன்றாவது ஓடுபாதையுடன் ஹீத்ரோவை விரிவுபடுத்துவதற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது.

ஆனால் அந்த முடிவுக்கு எதிராக உள்ளூர் அதிகாரிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வழக்குத் தொடுத்தனர்.

விரிவாக்கத்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் கூறுகின்றனர். 

Top