Images
  • msia covid
    (கோப்புப் படம்: AP/Vincent Thian)

COVID-19: தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியிருந்தாலும், இவ்வாண்டிற்குள் மக்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகாது - WHO

கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியிருந்தாலும் அதற்கான எதிர்ப்புச் சக்தி மக்களிடம் இந்த ஆண்டுக்குள் உருவாகாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல் முதலிய பழக்கங்களை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று நிறுவனம் வலியுறுத்தியது.

வறுமையில் உள்ள நாடுகளுக்கு COVAX திட்டத்தைக் கொண்டு சேர்க்க மருந்தாக்க நிறுவனங்கள் கைகொடுக்கும்படி நிறுவனம் மீண்டும் கோரியுள்ளது.

போதுமான தடுப்பு மருந்துகள் இருந்தால்தான் தடுப்பூசிப் போடும் பணிகளை அடுத்த மாதம் அந்த நாடுகளில் தொடங்க முடியும் என்று நிறுவனம் குறிப்பிட்டது.

COVAX திட்டத்தின்கீழ் இதுவரை 2 பில்லியன் முறைப் பயன்படுத்தக்கூடிய தடுப்பு மருந்துகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Top