Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கிருமிப்பரவலால் நொடித்துப்போன Hertz

பிரபல கார் வாடகைச் சேவை நிறுவனமான Hertz, அமெரிக்காவிலும், கனடாவிலும் நொடித்துப்போனதாக அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
கிருமிப்பரவலால் நொடித்துப்போன Hertz

AFP / JUSTIN SULLIVAN

பிரபல கார் வாடகைச் சேவை நிறுவனமான Hertz, அமெரிக்காவிலும், கனடாவிலும் நொடித்துப்போனதாக அறிவித்துள்ளது.

உலகளவில் ஏற்பட்டுள்ள கொரோனா கிருமிப்பரவலால் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாய் நிறுவனம் சொன்னது.

உலகெங்கும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கார் வாடகைச் சேவைக்கான தேவை உடனடியாக நின்றுபோனது.

இதனால் எந்த ஒரு முன்பதிவும், வருவாயும் இல்லாமல் நிறுவனம் நொடித்துப்போகும் நிலை ஏற்பட்டதாக அது தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டது.

ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலந்து ஆகிய பகுதிகள் உட்பட பல்வேறு நாடுகளில் சேவை வழங்கிவருகிறது நிறுவனம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்