Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பலத்த காற்றால் சேதமடைந்த விளையாட்டரங்கு

பாரிஸ்: பலத்த காற்று வீசியதால் டச்சு அணியின் AZ Alkmaar's என்ற விளையாட்டரங்கின் மேற்கூரையில் ஒருபகுதி சரிந்தது. 

வாசிப்புநேரம் -
பலத்த காற்றால் சேதமடைந்த விளையாட்டரங்கு

படம்: AFP

பாரிஸ்: பலத்த காற்று வீசியதால் டச்சு அணியின் AZ Alkmaar's என்ற விளையாட்டரங்கின் மேற்கூரையில் ஒருபகுதி சரிந்தது.

நல்லவேளையாக, கூரை சரிந்தபோது அரங்கில் யாரும் இல்லை.

17,000 இருக்கைகளைக் கொண்டுள்ள அந்த விளையாட்டரங்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

அரங்கு சேதமடைந்த படங்களைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அரங்கின் கூரை சரிந்தது அதிர்ச்சியாக இருந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது நிம்மதியளிப்பதாக அரங்கின் பொது நிர்வாகி தெரிவித்தார்.

அரங்கின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கப்படும் வரை, அங்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெற அனுமதிக்கப்பட மாட்டா என்றும் அவர் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்