Images
  • Hippo
    (படம்:  AFP/Carl De Souza) 

நீர்யானையால் தாக்கப்பட்டு இறந்த சீனச் சுற்றுப்பயணி

கென்யாவில் (Kenya) நீர்யானையால் தாக்கப்பட்ட சீனச் சுற்றுப்பயணி மாண்டார்.

நைவஷா (Naivasha) எனும் ஏரியின் கரையில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது அவரும் அவரது சகாவும், நீர்யானையால் தாக்கப்பட்டனர்.
உடனடியாக இருவரும் அந்த வட்டார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின் அவர்களில் ஒருவர், இறந்துவிட்டதாகவும், மற்றொருவர் உயிர்பிழைத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நேற்று முன் தினம் நடந்தது.

ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதி நாடுகளுக்கான வனவிலங்குச் சேவை அமைப்பு, நீர்யானை எங்கு சென்றது என்பதைக் கவனித்து வருவதாக தனது டுவிட்டர் (Twitter)பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இறந்தவர் 66 வயது சாங் மிங் சுவாங், உயிர் பிழைத்தவர் 62 வயது வூ பெங் தே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பெய்யும் கனத்த மழையால், அந்த வட்டார ஏரியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் அதனால் நீர்யானைகள் ஏரியைத் தாண்டி மற்ற இடங்களில் சுற்றித் திரிவதாகவும் கூறப்படுகிறது. 

Top