Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஏலத்தில் விற்கப்படாத ஹிட்லர் ஓவியங்கள்

ஒரு காலத்தில் ஜெர்மனியின் சர்வாதிகாரியாகக் கருதப்பட்ட அடோல்ஃப் ஹிட்லர் வரைந்ததாகக் கூறப்படும் ஓவியங்கள் அண்மை ஏலத்தில் விலைபோகவில்லை.

வாசிப்புநேரம் -
ஏலத்தில் விற்கப்படாத ஹிட்லர் ஓவியங்கள்

(படம்: AFP/Christof STACHE)

ஒரு காலத்தில் ஜெர்மனியின் சர்வாதிகாரியாகக் கருதப்பட்ட அடோல்ஃப் ஹிட்லர் வரைந்ததாகக் கூறப்படும் ஓவியங்கள் அண்மை ஏலத்தில் விலைபோகவில்லை.

மலைகள், புதர்கள், ஏரி என இயற்கையின் ரம்மியமான காட்சிகளைக் கொண்ட ஓவியங்கள்.

(படம்: AFP/DANIEL KARMANN)

ஹிட்லர் கைவண்ணத்தில் உருவானதாகக் கூறப்படும் 5 ஓவியங்களும் அவருக்குச் சொந்தமானது என நம்பப்படும் நாற்காலியும் ஏலம் விடப்பட்டன.

ஆனால், அவற்றை வாங்க யாரும் முன்வரவில்லை.

ஜெர்மனியின் நுரெம்பர்க் (Nuremberg) நகரில் நடைபெற்ற ஏலத்தில், ஹிட்லர் தொடங்கி வைத்த நாஸி இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட பொருள்கள் விற்கப்பட்டது பலருக்குச் சினமூட்டியது.

நகரின் மேயர் உல்ரிச் மாலி (Ulrich Maly) ஏலத்துக்குக் கண்டனம் தெரிவித்து, அது ரசனையற்றது என்று கூறினார்.

ஓவியங்களின் தொடக்க விலையோ சுமார் 20,000 டாலர்.

A.Hitler என்ற பெயர் ஓவியங்களில் பதிந்திருந்தாலும், அவை உண்மையிலேயே ஹிட்லரின் கைவண்ணத்தில் உருவானவையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அந்தச் சந்தேகமும் ஓவியங்கள் அதிக விலையில் விற்கப்படுவதும் யாரும் அவற்றை வாங்க முன்வராததற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

ஓவியங்களை ஏலத்தில் விற்க முயன்ற Weidler நிறுவனம், சிறிது காலத்துக்குப் பிறகு மீண்டும் விற்பனை முயற்சியில் இறங்கவிருப்பதாகத் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்