Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கொரோனா கிருமியோடு சேர்ந்து வாழும் சாத்தியத்தை ஹாங்காங் அரசாங்கம் நிராகரித்தது

ஹாங்காங் COVID-19 நோயை முற்றாகத் துடைத்தொழிக்கும் கொள்கையை இப்போதைக்குக் கைவிடும் அறிகுறிகள் தென்படவில்லை.

வாசிப்புநேரம் -

ஹாங்காங் COVID-19 நோயை முற்றாகத் துடைத்தொழிக்கும் கொள்கையை இப்போதைக்குக் கைவிடும் அறிகுறிகள் தென்படவில்லை.

கொரோனா கிருமியோடு சேர்ந்து வாழும் சாத்தியத்தை ஹாங்காங் அரசாங்கம் நிராகரித்தது.

COVID-19 தொடர்பான கட்டுப்பாடுகளை மீட்டுக்கொள்ளவும் அது மறுத்துவிட்டது.

ஹாங்காங்கின் கோவிட் தொடர்பான நிலைப்பாடு பெரும்பாலும் சீனத் தலைநிலத்தில் பின்பற்றப்படும் கொள்கையோடு ஒத்துப்போகிறது.

ஹாங்காங் குடியிருப்பாளர்களுக்கு Booster என்னும் கூடுதல் தடுப்புமருந்து செலுத்தப்பட வேண்டுமா என்பதுபற்றி முடிவெடுக்க நாளைமறுநாள் நிபுணர் குழு ஒன்று கூடவுள்ளது.

பருவகால சளிக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியை, COVID-19 தடுப்பூசியுடன் இணைந்து ஒரே நேரத்தில் போட உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

அதை நடைமுறைப்படுத்துவது பற்றியும், நிபுணர் குழு விவாதிக்கவிருக்கிறது.

ஒரே நேரத்தில் அந்த இரண்டு தடுப்புமருந்துகளையும் செலுத்துவதால் அவற்றின் செயல்திறன் பாதிக்கப்படுவதில்லை எனத் தெரியவந்துள்ளது.

ஹாங்காங் குடியிருப்பாளர்களில் இதுவரை 68 விழுக்காட்டினர் ஒரு தடுப்பூசியை மட்டுமாவது போட்டுக்கொண்டுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்