Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹாங்காங்கில் சீனப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரபூர்வ அலுவலகம்

ஹாங்காங்கில் சீனப் புலனாய்வு அமைப்பினர் வெளிப்படையாகப் பணியாற்றுவதற்கான புதிய அலுவலகம் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கில் சீனப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரபூர்வ அலுவலகம்

(படம்: AFP/Anthony Wallace)

ஹாங்காங்கில் சீனப் புலனாய்வு அமைப்பினர் வெளிப்படையாகப் பணியாற்றுவதற்கான புதிய அலுவலகம் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

பல்லாண்டாய் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவரும் விக்டோரியா பூங்காவிற்கு அருகிலுள்ள ஹோட்டலில் அந்த அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

1989ஆம் ஆண்டு Tiananmen சதுக்கத்தில் பெய்ச்சிங் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கையை நினைவுகூரும் வருடாந்தர நிகழ்ச்சியும் ஒவ்வொரு ஜூன் மாதமும் அந்தப் பூங்காவில்தான் நடைபெறும்.

ஹாங்காங் அரசாங்க, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பு அமைப்பின் பெயர்ப்பலகை திறந்துவைக்கப்பட்டது.

சீனா கடந்த வாரம் ஹாங்காங்கில் புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நடப்புக்குக் கொண்டுவந்தது.

பிரிவினைவாதம், அதிகாரத்தைக் கீழறுத்தல், பயங்கரவாதம் போன்றவற்றை அந்தச் சட்டம் குற்றமாக வகைப்படுத்துகிறது.

1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து ஹாங்காங்கின் சுதந்திரத்துக்கு எதிரான தீவிர மாற்றமாக அந்தச் சட்டம் கருதப்படுகிறது.

அரசாங்கத்துக்கு எதிராக கிட்டத்தட்ட ஓராண்டு நீடித்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அது அறிமுகம் கண்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்