Images
  • hk
    (படம்: Reuters)

ஹாங்காங்கிற்கான பயண எச்சரிக்கையை உயர்த்தியுள்ள அமெரிக்கா

அமெரிக்கக் குடிமக்கள் ஹாங்காங்கிற்குச் செல்வது தொடர்பிலான பயண எச்சரிக்கையை இரண்டாம் நிலைக்கு வாஷிங்டன் உயர்த்தியுள்ளது.

ஹாங்காங்கில் இருக்கும் அமெரிக்கப் பயணிகள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அது வலியுறுத்தியது.

மாதக் கணக்கில் தொடரும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து சில நேரங்களில் வன்முறை மூண்டதை அமெரிக்கா சுட்டியது.

ஹாங்காங்கில் முன்னறிவிப்பின்றியும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாகக் கூறிய அமெரிக்கத் தூதரகம், அவை தொடரும் சாத்தியம் இருப்பதாய்க் குறிப்பிட்டது.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகியவையும் ஹாங்காங் செல்வது தொடர்பில் அவற்றின் குடிமக்களுக்குப் பயண ஆலோசனை விடுத்துள்ளன.

இந்த வார இறுதியில் ஹாங்காங்கில் கூடுதல் ஆர்ப்பாட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை நகரின் அனைத்துலக விமான நிலையத்தில் பேரணி நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Top