Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வெளிநாட்டு அரசாங்கங்கள் எந்தெந்த கடப்பிதழ்களை அங்கீகரிக்க முடியும் என்பதை ஹாங்காங் முடிவெடுக்க அதிகாரம் இல்லை: பிரிட்டன்

பிரிட்டன், வெளிநாட்டு அரசாங்கங்கள் எந்தெந்த கடப்பிதழ்களை அங்கீகரிக்க முடியும் என்பதை ஹாங்காங் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என்று சாடியுள்ளது.

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு அரசாங்கங்கள் எந்தெந்த கடப்பிதழ்களை அங்கீகரிக்க முடியும் என்பதை ஹாங்காங் முடிவெடுக்க அதிகாரம் இல்லை: பிரிட்டன்

(படம்: AFP/Anthony Wallace)

பிரிட்டன், வெளிநாட்டு அரசாங்கங்கள் எந்தெந்த கடப்பிதழ்களை அங்கீகரிக்க முடியும் என்பதை ஹாங்காங் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என்று சாடியுள்ளது.

வெளிநாட்டு அரசாங்கங்கள், BNO என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டுக் கடப்பிதழைப் பயண ஆவணமாக ஏற்றுக்கொள்வதை நிறுத்த வேண்டும் என்று ஹாங்காங் அரசாங்கம் கேட்டுக்கொண்டிருந்தது.

அதற்குப் பதிலாக ஹாங்காங்கின் கடப்பிதழைப் பயன்படுத்துமாறு, 14 நாடுகளில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களிடம் அது தெரிவித்தது.

புதிய விசா திட்டத்தைப் பிரிட்டன் அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து, ஹாங்காங் அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

ஹாங்காங்கை விட்டு வெளியேற விரும்பும் ஹாங்காங்வாசிகள் பிரிட்டனின் குடியுரிமையைப் பெற அந்தத் திட்டம் வழிவகுக்கும்.

கடந்த ஆண்டு ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டதால், பிரிட்டனின் புதிய விசா திட்டம் வெளியிடப்பட்டது.

- REUTERS 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்