Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹோட்டல் முன்பதிவுடன் தொடர்புடைய தவறான விளம்பரங்கள் விரைவில் முடிவுக்குவரும்

ஹோட்டலில் தங்குவதற்குரிய முன்பதிவு தொடர்பான தவறான விளம்பரங்கள் விரைவில் முடிவுக்கு வரவுள்ளன.

வாசிப்புநேரம் -

ஹோட்டலில் தங்குவதற்குரிய முன்பதிவு தொடர்பான தவறான விளம்பரங்கள் விரைவில் முடிவுக்கு வரவுள்ளன.

வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தும் மோசடியான விளம்பரங்கள் குறித்து நடத்தப்பட்ட புலனாய்வின் மூலம் அது சாத்தியமாகவுள்ளது.

பிரிட்டனின் போட்டித்தன்மை, சந்தைகள் ஆணையம், முன்பதிவுக்கான ஆறு இணையத் தளங்கள், முறைகேடான விற்பனை உத்திகளைப் பின்பற்றியதைக் கண்டுபிடித்துள்ளது.

Expedia, Booking.com, Agoda, Hotels.com, ebookers, trivago ஆகியவையே அந்த ஆறு தளங்கள்.

வற்புறுத்தும் விற்பனை உத்திகள், தவறாக நம்பவைக்கும் சலுகைகள், தெளிவற்ற கட்டணம்-ஆகியவற்றை ஆணையம் சில எடுத்துக்காட்டுகளாகச் சுட்டியது.

இணையப் பயனீட்டாளர்கள் குறிப்பிட்ட நகரத்தில் ஹோட்டல்களைத் தேடும்போது, அதே நகரத்திலுள்ள மற்ற சில ஹோட்டல்களில் முன்பதிவு முடிந்துவிட்டதாகக் காட்டும் விளம்பரங்களையும் ஆணையம் சுட்டியது.

அந்த விளம்பரம், பயனீட்டாளரை உடனடியாக ஹோட்டல் அறைக்குப் பதிவு செய்ய நெருக்கும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

வார இறுதி நாளுக்கான கட்டணத்தை வார நாளுக்கான கட்டணத்தோடு ஒப்பிடுவது, சொகுசு ஹோட்டல் கட்டணத்தை சாதாரண ஹோட்டலோடு ஒப்பிட்டுக் காட்டுவது போன்றவை நியாயமற்ற நடைமுறைகள் என்றது ஆணையம்.

இதுபோன்ற இணையத் தளங்கள், வாடிக்கையாளர் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்