Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆக வெப்பமான மாதமாக, ஜூலை

உலக அளவில், கடந்த மாதம், வரலாற்றில் ஆக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் தேசியக் கடல், வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஆக வெப்பமான மாதமாக, ஜூலை

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

உலக அளவில், கடந்த மாதம், வரலாற்றில் ஆக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் தேசியக் கடல், வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிலத்திலும் கடலிலும் பதிவான வெப்பநிலை, 20ஆம் நூற்றாண்டின் சராசரியைவிட சுமார் 1 டிகிரி அதிகம்.

1880களில் ஆரம்பிக்கப்பட்ட பதிவுகளில் அதுவே ஆக அதிகமான அளவு.

அலாஸ்கா, மத்திய ஐரோப்பா, வடக்கு, தென்மேற்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெப்பநிலை மாற்றங்கள் பதிவாயின.

பொதுவாகவே உலக அளவில், ஆண்டின் ஆக வெப்பமான மாதம் ஜூலையாகத்தான் இருக்கும்.

கடந்த 5 ஆண்டுகளாக ஆக வெப்பமான மாதமாக ஜூலை மாதம் தொடர்ந்து பதிவாகி வருகிறது.

இந்நிலையில், ஸ்காண்டிநேவியாவின் சில பகுதிகளிலும் மேற்கு, கிழக்கு ரஷ்யாவிலும் சென்ற மாதம் வெப்பநிலை, சராசரியைவிடக் குறைவாக பதிவானது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்