Images
  • hsbc
    (படம்:  Reuters)

உலகெங்கும் 10,000 பேரை ஆள்குறைப்பு செய்யத் திட்டமிடும் HSBC வங்கி

HSBC ஹோல்டிங்ஸ் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் சுமார் 10,000 ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிடுவதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் (Financial Times) நாளேடு தெரிவித்துள்ளது.

அதிகச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகயால் அதிகம் பாதிக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது.

இந்தக் காலாண்டிற்கான வர்த்தக அறிக்கையை வெளியிடும்போது ஆட்குறைப்பு முயற்சிகள் அறிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

சவால்மிக்க உலகச் சூழலுக்கேற்ப நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மாறவேண்டும் எனக் கூறியுள்ளார் வங்கிக் குழுமத்தின் தற்காலிகத் தலைமை நிர்வாக அதிகாரி நோவெல் குவின் (Noel Quinn).

இதற்குமுன் சுமார் 4,000 பேரை இவ்வாண்டு ஆட்குறைப்புச் செய்வதாக HSBC அறிவித்தது.

ஹாங்காங்கின் பதற்றமான சூழல், அமெரிக்க-சீன வர்த்தகப் போர், பிரெக்சிட் ஆகியவற்றைக் கோடிகாட்டி ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்தது நிறுவனம். 

Top