Images
  • huawei (2)
    (படம்: Reuters/Alexander Bibik)

Huawei தலைமை நிதி அதிகாரியை விடுவிக்காவிட்டால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் - சீனா மிரட்டல்

Huawei Technologies நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி Meng Wanzhou-வை உடனடியாக விடுதலை செய்யுமாறு, சீன வெளியுறவு அமைச்சு கனடாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

சட்டபூர்வமாக அவருக்கு உள்ள உரிமையை மதித்து நடக்குமாறு கனடாவை அது வலியுறுத்தியது.

இல்லாவிட்டால் கடுமையான பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்குமென சீனா எச்சரித்தது.

அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, திருவாட்டி மெங், இம்மாதம் முதல்தேதி, வேங்கூவரில் கைது செய்யப்பட்டார்.

ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் விதித்துள்ள தடைகளை மீறி, ஈரானுக்குத் தொலைத் தொடர்புக் கருவிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.

அமெரிக்காவுக்கு அவர் நாடுகடத்தப்பட்டால், பல்வேறு நிதி அமைப்புகளை ஏமாற்ற சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கலாம்.

அத்தகைய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சத் தண்டனையாக 30 ஆண்டுச் சிறைவாசம் விதிக்கப்படலாம். 

Top