Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Huawei நிறுவனத்தின் மீது மேலும் அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்குமா அமெரிக்கா?

அமெரிக்க அரசாங்கம் Huawei நிறுவனத்தின் மீது மேலும் அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடிய விதிமுறையை அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாசிப்புநேரம் -
Huawei நிறுவனத்தின் மீது மேலும் அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்குமா அமெரிக்கா?

(படம்: Toby Melville/File Photo)

அமெரிக்க அரசாங்கம் Huawei நிறுவனத்தின் மீது மேலும் அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடிய விதிமுறையை அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை வாங்குவதற்கு Huawei நிறுவனம் மீது கடந்த மே மாதத்தில், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அவற்றுள், அமெரிக்காவின் தொழில்நுட்பத்தைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட சில வெளிநாட்டுப் பொருள்களும் அடங்கும்.

அமெரிக்கா புதிய சட்டத்தை அறிமுகம் செய்தால், மேலும் அதிகமான வெளிநாட்டுப் பொருள்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

Huawei நிறுவனம் மற்ற நாடுகளிலிருந்து பொருள்களை வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

இருப்பினும், புதிய விதிமுறை Huawei-ஐ மட்டுமல்ல, அமெரிக்க நிறுவனங்களையும் பாத்திக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்