Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Huawei 5G சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் - இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா எச்சரிக்கை

Huawei 5G சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
Huawei 5G சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் - இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா எச்சரிக்கை

(படம்: AFP/WANG ZHAO)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Huawei 5G சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

The Australian Financial Review, The Australian ஆகிய செய்தித்தாள்கள் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் புதுடில்லியில் நடந்த சந்திப்பில் ஆஸ்திரேலியாவின் இணையக் கட்டமைப்புப் பாதுகாப்பு அதிகாரிகள் Huawei 5G சாதனங்கள் தொடர்பாகப் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா ஏன் Huawei சாதனங்களைத் தடைசெய்தது என்ற விளக்கத்தையும் இந்திய அதிகாரிகளிடம் விவரித்ததாக செய்தித்தாள்கள் கூறின.

ஆஸ்திரேலியா அதன் 5G கட்டமைப்புகளில் அதிக ஆபத்துள்ள விற்பனையாளர்களைத் தடைசெய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா, அமெரிக்காவுடன் Huawei மீதான தடை குறித்துப் பேசியதாகவும் செய்தித்தாள்கள் கூறின.

Huawei 5G கட்டமைப்புச் சாதனங்களுக்கு எதிராக ஆஸ்திரேலியா 2018ஆம் ஆண்டு தடை விதித்தது. Huawei-யைத் தடைசெய்த முதல் நாடும் ஆஸ்திரேலியா தான். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்