Images
  • huawei cfo
    (படம்: Huawei)

Huawei-இன் உலக தலைமை நிதி நிர்வாகி கனடாவில் கைது

Huawei- திறன்பேசி நிறுவன உலகத் தலைமை நிதி நிர்வாகியைக் கனடிய அதிகாரிகள் வான்கூவர் (Vancouver) நகரில் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்படக்கூடும் என்று கனடாவின் நீதித்துறை இன்று தெரிவித்தது.

அமெரிக்கா விதித்துள்ள தடைகள் தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டார் என்று கூறப்பட்டது.

இம்மாதம் 1ஆம் தேதி நிறுவனத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான மெங் வான்ஸோ (Meng Wanzhou) கனடிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கனடிய நீதிமன்றத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அவரிடம் விசாரணை நடத்தப்படும்.

கைது செய்யப்பட்ட மெங்கை விடுவிக்குமாறு சீனத் தூதரகம் கோரியது. இந்தச் சம்பவத்தால் அமெரிக்காவுடனான தனது உறவில் விரிசல் அதிகமாகலாம் என்று சீனா அஞ்சுகிறது.

அமெரிக்க ஏற்றுமதி, தடைச் சட்டத்தை மீறி, வாஷிங்டனின் தயாரிப்புகளை ஈரானுக்கும் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ததாக 2016 ஆம் ஆண்டிலிருந்து Huawei நிறுவனத்திடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்திவருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

Top