Images
  • huawei
    (படம்: REUTERS/Alexander Bibik/Files)

அமெரிக்கத் தடைகளை மீறி ஈரானுடன் உடன்படிக்கை - குற்றச்சாட்டை எதிர்நோக்கும் Huawei தலைவர்

Huawei திறன்பேசி நிறுவனத்தின் உலகத் தலைமை நிதி நிர்வாகி Meng Wan Zhou, அமெரிக்கத் தடைகளை மீறி ஈரானுடன் உடன்படிக்கை செய்துகொண்டதன் தொடர்பில் மோசடிக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, இம்மாதத் தொடக்கத்தில் கனடாவில் அவர் கைது செய்யப்பட்டார்.

2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானுடன் உடன்படிக்கை செய்துகொள்ள Skycom எனும் அதிகாரபூர்வமற்ற கிளை நிறுவனத்தைத் திருவாட்டி மெங் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், Skycomஉம், Huaweiஉம் வெவ்வேறு நிறுவனங்கள் என்று அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் அவர் தவறான தகவல் தந்ததாகக் கூறப்பட்டது.

இரண்டும் வெவ்வேறு நிறுவனங்கள் அல்ல என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. 

Top