Images
  • huawei (1)
    (படம்:AFP/Johannes EISELE)

Huawei உயர் நிர்வாகி கைது :உலகப் பங்கு விலைகள் சரிந்தன

நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்ஸோ அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க கனடாவில் கைதானதாகக் கூறப்படுகிறது.

கைது நடவடிக்கை எவ்வாறு அமெரிக்க சீன வர்த்தகப் போர் நிறுத்தத்தைப் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.

Huawei நிறுவனத்தின் துணைத் தலைவரும் அதன் நிறுவனர் ரென் சங்க ஃபையின் மகளுமான மெங் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று சீனா, கனடாவைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அவரின் கைது நடவடிக்கையால் கனடா மனித உரிமை கோட்பாடுகளை மீறிவிட்டது என்று என்று பெய்ஜிங் குற்றஞ்சாட்டியுள்ளது.

கனடியப் பிரதமர் ஜஸ்டின் டிரூடோ கைது நடவடிக்கையில் தம் அரசாங்கத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.


 

Top